Sunday, May 24, 2009

விர்ச்சுவல் சிஸ்டம் இலவசமாக வேண்டுமா ?

நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம் , எப்போதும் laptop ஐ தூக்கி கொண்டு , கங்காரு போல அலைய முடியாது. உங்களுகென்று ஒரு Virtual System இருந்தால் வசதியாக இருக்கும். இணையத்துடன் ஒரு கணினி இருந்தால் போதும் உங்கள் வீட்டு கணினி உங்கள் மடியில் இருப்பது போல இருக்கும். Remote Desktop Connection ஆ என்று கேட்காதிர்கள். இது அதற்கும் ஒரு படி மேலே. Remote Connection இல் உங்கள் வீட்டு சிஸ்டம் எப்போதும் ON இல் இருக்க வேண்டும். நான் சொல்லவருவது " நீங்கள் சிஸ்டம் ஏதும் வாங்கவேண்டியது இல்லை அதை எப்போதும் ON செய்ய வேண்டியதும் இல்லை.

நாம் UNIX, LINUX, MAC OS, WINDOWS XP, VISTA endru எத்தனையோ operating சிஸ்டம் களை பார்த்து விட்டது . இது என்ன புதுசா இன்னொரு OS என்று சலிபடைய வேண்டாம். இது மற்ற OS களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. உண்மையில் இது ஒரு OS அல்ல . இது ஒரு இணைய தளம் . இந்த இணைய தளமே ஒரு OS போல செயல்படுகிறது. அது தான் இதனின் சிறப்பு. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்த இணையதளம் என்று சொல்வேன் . Windows வழங்கும் அடிப்படையான வசதிக்கள் அனைத்தும் இதில் உண்டு. அது தான் eyeos.info

Word Prossessor,
Address Book,
Calculator,
Calendar,
Notepad,
Image Viewer,
Media Player,
Message Box,
Chess Game,
Presentation ( powerpoint),
Worksheet ( like Excel ),
FTP Uploader,
File Storage,
மைல்போக்ஸ்
இன்னும் ஏராளமான வசதிகள் இந்த தளத்தில் மன்னிக்கவும் இந்த OS இல் உண்டு.

என்னை அசத்திய ஒரு விஷயம் விண்டோஸ் இல் உள்ளது போல "Task Manager" இதிலும் உண்டு Process Manager என்ற பெயரில். இதில் நீங்கள் உங்களுக்கு வேண்டாத Process ஏதும் ஓடி கொண்டிருந்தால் அதை Kill Process கொடுத்து மூடிவிட முடியும்.

RSS Feed உம உண்டு . உங்களுக்கு பிடித்த Theme ஐ கூட மாற்றி கொள்ளும் வசதி உண்டு.

ஊரு ஊராக சுற்றும் Marketing People, Sales Rep போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளம். மாணவர்கள், ஆசிரியர்கள் , தொழிலதிபர்கள் என பலதரபினருக்கும் பயனுள்ள எளிமையான தளம் . சுருக்கமாக சொன்னால் இது ஒரு multipurpose website.

இதில் கணக்கை தொடங்குவதும் மிக எளிது. பிறகு எதற்கு காத்திருக்கிறீர்கள் உடனே செல்லுங்கள் ://eyeos.info

காதுகளை கொண்டாங்கள் ஒரு Magic சொல்லி தருகிறேன் . இந்த இணையதளதிருக்கு சென்று F11 ( Full Screen) கீ யை பிரஸ் பண்ணுங்கள் . இணையதளம் மறைந்து புது OS வந்துவிடும் . உங்கள் நண்பர்களிடம் இதில் வேலை பார்க்க சொல்லுங்கள் . புதிதாக உணர்வார் . தலையை சொரிவார். மீண்டும் F11 கீ யை பிரஸ் பண்ணி அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துங்கள் .

4 comments:


  1. எங்கிருந்தும் இயக்க - இலவச இணைய இயங்குதளம்
    சூ ப் ப ர் ஆப்பரேடிங் சி ஸ் ட ம்

    இது ஆன்லைன் ஓ எஸ்.

    ReplyDelete
  2. நல்ல உதாரணம். கலக்கிட்டீங்க.

    //நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம் , எப்போதும் laptop ஐ தூக்கி கொண்டு , கங்காரு போல அலைய முடியாது.

    ReplyDelete
  3. really super o.s Thank you 4 that valuable information

    ReplyDelete
  4. சூப்பரப்பு!!!
    க்ளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் ஆரம்பமே அசத்தல்

    ReplyDelete